NATIONAL

டத்தோ கிராமாட் சந்தையின் மறு மேம்பாட்டிற்கு டிபிகேஎல் முன்னுரிமை அளிக்க வேண்டும்

கோலாலம்பூர், ஜூலை 27: மிகவும் பழமையான, பழுதடைந்து காணப்படும் டத்தோ கிராமாட் சந்தையை மேம்படுத்த கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு  பிரதமர் உத்தரவு.

 இதை மேம்படுத்துவதில்  தித்திவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி மற்றும் கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ கமருல் ஜாமான் மாட் சாலே ஆகியோர் கவனம் செலுத்த வேண்டி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்   கேட்டுக்கொண்டார்

“முன்பு இந்த டத்தோ கிராமாட் சந்தையை டிபி கேஎல் தனியார் நிறுவனத்திடம் கொடுத்திருந்தது. எனவே, இப்பொழுது டிபி கேஎல் அதை திரும்பப் பெற்றுள்ளது. அவ்விடத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால்  தோட்ட மற்றும் பண்டங்கள் அமைச்சரும்  தித்திவாங்சா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி மற்றும் கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ கமருல் ஜாமான் மாட் சாலே ஆகியோர் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

பிரதமர் டத்தோ கிராமாட் சந்தை மற்றும் ஜாலான் ராஜா மூட அப்துல் அஜீஸ் உணவு வளாகத்திற்கு சென்று பார்வையிட்டார்.

– பெர்னாமா


Pengarang :