NATIONAL

நான்கு மாநிலங்களில் திறந்தவெளி தீ சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது – ஜேபிபிஎம்

புத்ராஜெயா, ஜூலை 30 – சிலாங்கூர், பேராக், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய நான்கு மாநிலங்களில் திறந்தவெளி தீ சம்பவங்கள் குறித்த அழைப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதாவது, கடந்த வாரம் ஒரு நாளைக்கு 100 அழைப்புகளைத் தாண்டியுள்ளது என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) தெரிவித்துள்ளது.

ஜூலை 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் திறந்தவெளி எரிப்பு பற்றிய தினசரி அழைப்புகளின் எண்ணிக்கை 100 வழக்குகளைத் தாண்டியது. அதுமட்டுமில்லாமல், சனிக்கிழமை 249 அழைப்புகளையும் நேற்று 244 அழைப்புகளையும் எட்டியுள்ளது என நேற்று மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் ஜேபிபிஎம் இயக்குநர் ஜெனரல் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் கூறினார்.

ஜேபிபிஎம்முக்கு தினமும் சராசரியாக 50 முதல் 60 அழைப்புகள் திறந்தவெளி தீ பற்றி வந்ததாகவும், ஆனால் தற்போதைய தென்மேற்கு பருவக்காலம் காரணமாக திடீரென அந்த எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.

” திறந்த தீ பொதுவாக பெரிய பகுதிகளை உள்ளடக்கியது மற்றும் அணைக்க நீண்ட நேரம் எடுக்கும்,” என்று அவர் கூறினார்.

பருவமழை தொடங்கும் வரை குறைந்த மழைப்பொழிவு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது. இது செப்டம்பர் மத்தியில் வரை வெப்பமான மற்றும் வறண்ட வானிலையை ஏற்படுத்தும்.

மே 17 முதல் ஜூலை 27 வரை, ஜேபிபிஎம் 2,491 திறந்தவெளி தீ சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. இதில் விவசாய நிலங்கள், புதர்கள் மற்றும் குப்பைத் தீ சம்பவங்கள் ஆகியவை அடங்கும் என்று நூர் இஷாம் கூறினார்.

பேராக் மாநிலத்தில் 515, சிலாங்கூரில் 344, திரங்கானுவில் 289 சம்பவஙகள் பதிவாகியுள்ளன.

“மேலும், ஜூன் மாதத்தில், 685 திறந்தவெளி தீ சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

திறந்தவெளி தீ சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, ஜேபிபிஎம் செயல்பாடுகளை மிகவும் திறமையாக மேற்கொள்ளும் மற்றும் ஹாட்ஸ்பாட்களை அடையாளம் காணும் என்று நூர் இஷாம் கூறினார்.

“நாங்கள் நிலப்பரப்பு தளங்கள் போன்ற பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். மேலும், நெருக்கமான கண்காணிப்பை மேற்கொள்வோம்,” என்று அவர் கூறினார், இந்த நடவடிக்கைகளில் சமூக தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுவார்கள்.

– பெர்னாமா


Pengarang :