NATIONAL

பணியமர்த்தல் நடைமுறை, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 30 – உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை  மேம்படுத்துவதில்  மருத்துவ நிபுணர்களுடன் சுகாதார அமைச்சு இணைந்து செயல்படும்.

நேற்று தமது தலைமையில்   நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது  கூறினார்.

இறைவன் அருளால் நான் இரண்டு விஷயங்களை உறுதி செய்ய விரும்புகிறேன். முதலாவது,  உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பது.

பல பகுதிகளில் இன்னும் கூட்ட நெரிசலும்  மோசமான வசதிகளும் அல்லது இரண்டும் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆயினும், அவற்றுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இரண்டாவது, அடிமட்ட நிலையிலான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு ஏற்ப வளங்களின் திட்டமிடலும் விநியோகமும் இருப்பதை உறுதி செய்வதன் வழி  சீரற்ற முறையில் இருக்கும் மனித வளப் பகிர்வு   சிக்கலைக் கையாள்வதாகும்.

இது ஒரு நாளில் முடியக்கூடிய  வேலை அல்ல. ஆனால் அனைவரின் பிரார்த்தனை மற்றும் ஆதரவுடன் நாங்கள் அதனை நிறைவேற்றுவோம்  என்று அவர் இன்று முகநூல் பதிவில் கூறினார்.


Pengarang :