NATIONAL

கழிவுநீர் குழியில் சிக்கிய இருவர் மரணம்

அலோர் ஸ்டார், ஜூலை 31: நேற்று ஜித்ராவில் உள்ள பாயா கமுந்திங் இடைநிலைப்பள்ளி முன்பு உள்ள கழிவுநீர் குழியில் சிக்கிய இருவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காலை 9.29 மணிக்கு தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், பின் 10 நிமிடங்களுக்குள் தீயணைப்பு படை சம்பவ இடத்தை அடைந்ததாகவும் ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) மூத்த உதவி தீயணைப்புத் தலைவர் முகமட் புஸதான் கருடின் கூறினார்.

பாதிக்கப்பட்ட இருவரும் 27 மற்றும் 31 வயதுடையவர்கள். அவர்கள் சுமார் 4.5 மீட்டர் ஆழமுள்ள கழிவுநீர் குழியில் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டதாக கூறினார்.

“குழிக்குள் இறங்குவதற்கு முன், அந்த இடத்தில் வாயு ஆபத்தின் அளவை உறுதிசெய்ய, தீயணைப்பு வீரர்கள் எரிவாயு கருவியைப் பயன்படுத்துகின்றனர்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இருவரும் வெற்றிகரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர். ஆனால், அவர்கள் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) உறுதிப்படுத்தியதாக முகமட் புஸதான் கூறினார்.

நேற்று மதியம் 12.32 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிவுற்றது.

– பெர்னாமா


Pengarang :