ANTARABANGSA

பாரிஸ் 2024- ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வெற்றியாளர்களை பேர்லி தான் – மு.தீனா ஜோடி சந்திக்கிறது

பாரிஸ், ஜூலை 31- எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற விருக்கும் ஒலிம்பிக் 2024  மகளிர் இரட்டையர் பூப்பந்து போட்டியின் காலிறுதி சுற்றில் தேசிய மகளிர் இரட்டையர்களான பேர்லி தான் – மு.தீனா ஜோடி ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வெற்றியாளர்களான தென்கொரியாவின் கிமி சூ இயோங்- கோங் யீ யோங் இணையைச் சந்திக்கவுள்ளது.

இங்குள்ள போர்ட்டே டி லா செப்பல் அரங்கில் குழு நிலையிலான போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில் நாக் அவுட் எனப்படும் தோற்றால் வெளியேறும் கட்டத்திற்கான குலுக்கல் நேற்றிரவு நடைபெற்றது.

அந்த குலுக்கலின் படி காலிறுதிச் சுற்றில் கடந்த 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சூ இயோங்- ஹி யோங் ஜோடியுடன் பியர்லி-தினா ஜோடி களம் காணவிருக்கிறது.

ஆகக் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இவ்விரு ஜோடிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. அந்த 2021 உலக டூவர் ஃபைனல் குழு ஆட்டத்தில் அந்த கொரிய ஜோடி 14-21 மற்றும் 14-21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

உலகின் பத்தாம் நிலை ஜோடியும் 2022 பெர்மிங்ஹாம் காமன்வெல்த் சாம்பியனுமான அந்த தென்கொரிய இணையை பேர்லி தான் – மு.தீனா ஜோடி வெற்றி கொள்ளும் பட்சத்தில் அந்த ஜோடிக்கு மற்றொரு அக்கினி பரீட்சைக் காத்திருக்கிறது.

அடுத்து நடைபெறும் போட்டியில் பாரிஸ் 2024- ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வெற்றியாளர்களை பேர்லி தான் – மு.தீனா ஜோடி சந்திக்கிறது


Pengarang :