SELANGOR

காஜாங் தொகுதியில் கால்வாய்கள் மற்றும் சாலைகளை மேம்படுத்த மாரிஸ் நிதி பயன்படுத்தப்பட்டது  

ஷா ஆலம், ஜூலை 31: கால்வாய்கள் மற்றும் சாலைகளை மேம்படுத்த மலேசிய சாலை பதிவு தகவல் அமைப்பின் (மாரிஸ்) ஒதுக்கீட்டை காஜாங் தொகுதி பயன்படுத்தியது.

தாமான் புக்கிட், காஜாங் பாருவில் 4 கி.மீ.க்கும் அதிகமான நீளம் உள்ள பழைய கால் வாய்யை சரிசெய்ய ரிம 76,900 நிதி பயன்படுத்தப்பட்டது என சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் கூறினார்.

“இந்த மலை சரிவுகளில் இருந்து பாய்ந்து வரும் நீரை இந்த கால்வாய் தடுக்க முடியாது என்பதால் குடியிருப்பாளர்கள் உடனான எனது சந்திப்பின் பின்னர் இதை சரி செய்வதற்கான முன்மொழிவு மாரிஸிடம் முன்வைக்கப்பட்டது.

“காஜாங் நகராண்மை கழகத்தினால் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் மூலம் இந்த பராமரிப்பு திட்டம் இரண்டு மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.

கிரவுன் சிட்டி, செராஸ் முதல் சுங்கை லோங் வரை சாலை அமைக்கும் திட்டங்களை செயல் படுத்தவும் மாரிஸின் நிதி பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இந்த கால்வாய் மற்றும் சாலை மேம்படுத்தும் திட்டம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனை தரும் என்று டேவிட் நம்புகிறார்.


Pengarang :