SELANGOR

உதவித் திட்டங்களை செம்மைப்படுத்த ‘பாடு‘ தரவுகளை மாநில அரசு பயன்படுத்தும்

ஷா ஆலம், ஆக 5- மாநில மக்களின் வருமான இடைவெளியை மதிப்பீடு  செய்ய ” பாடு ”  எனப்படும் முதன்மை தரவு மையம் மற்றும் தேசிய வறுமை  தரவு வங்கி (இகாசே) ஆகியவற்றின் தகவல்கள் மாநில அரசு  பயன்படுத்தும்.  உயர் வருமானம் பெறும் மாநிலம் என்ற உலக வங்கியின்   அறிக்கை கேற்ப மக்கள் நலத் திட்டங்களை  மறுசீரமைப்பு செய்யும்  மாநில அரசின் முயற்சியின்   அடிப்படையில் இது அமைந்துள்ளது என்று   மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்தாண்டு வெளியிடப்பட்ட தேர்தல் கொள்கை அறிக்கையிலும் இந்த  முன்னெடுப்பு விவரிக்கப்பட்டுள்ளது. உயர் வருமானம் தரும் வேலை  வாய்ப்புகளை உருவாக்குவதும் அதில் அடங்கும் என்று அவர்  தெரிவித்தார்.  சராசரி விகிதாசார முழுமை இலக்கை நாம் அடைந்து விட்டோம்.
இப்போது நாம் குறைந்த மற்றும் அதிக வருமான இடைவெளியைக்  குறைக்க விரும்புகிறோம். இதன் அடிப்படையில் ஆதாரமற்ற தரவுகள்   உள்பட அனைத்து தரவுகளையும் நாங்கள் ஆராயவிருக்கிறோம் என்று   அவர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் மாநில நிலையிலான தேசியக்  கொடியைப் பறக்கவிடும் நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர்   செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உயர் வருமானம் பெறும் மாநிலமாக சிலாங்கூர் பட்டியலிடப்பட்ட   போதிலும் மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கு தமது நிர்வாகம்   தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் சொன்னார்.  உலக வங்கியின் அறிக்கையின் அடிப்படையில் சிலாங்கூர் உயர் வருமானம் கொண்ட மாநிலமாக உருவாக்கியுள்ளதாக மலேசிய    உலக வங்கியின் பொருளாதார நிபுணர் டாக்டர் அபூர்வா சிங்கி கடந்த   மாதம் கூறியிருந்தார்.

Pengarang :