NATIONAL

இளைஞர்,விளையாட்டுத் துறை அமைச்சின் மின்- விளையாட்டு நிதி வெ.10 லட்சமாக அதிகரிப்பு

கோலாலம்பூர், ஆக 6 – இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு (கே.பி.எஸ்.) இஸ்போர்ட்ஸ் இண்டர்கிரேடட்  (இ.எஸ்.ஐ.) மூலம் 2024ஆம் ஆண்டிற்கான கே.பி.எஸ் இஸ்போர்ட்ஸ் இண்டர்கிரேடட்  எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட மின்- விளையாட்டு நிதி ஒதுக்கீட்டை 250,000 வெள்ளியிலிருந்து 10 லட்சம் வெள்ளியாக உயர்த்தியுள்ளது.

இந்த 10 லட்சம் வெள்ளி மானியம் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படும் என்று இ.எஸ்.ஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகபட்சம்  30,000 வெள்ளி நிதி வரம்புடன் மொத்தம் 700,000 வெள்ளி பொதுமக்களுக்கும்  மீதமுள்ள தொகை  அதிகபட்சம் 15,000 வெள்ளி நிதி வரம்புடன் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும்  வழங்கப்படும்.

இந்த நிதி  அதிகரிப்பு பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும்  நாட்டின் மின் விளையாட்டு  சூழல் அமைப்பின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திறன் மேம்பாடு, மின்-விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளை ஏற்பாடு செய்தல், மின்-விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல், மின்-விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் சமூக விளையாட்டுத் திட்டங்கள் உட்பட பல்வேறு முயற்சிகளுக்கு  இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மின்-விளையாட்டு  நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் திட்டங்களை மேற்கொள்ள  நிதியுதவி தேவைப்படும் சிறிய நிறுவனங்கள், கிளப்புகள், சங்கங்கள் மற்றும் அமைப்புகள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றன

KBS ESports Fund 2024 நிதிக்கான  விண்ணப்பங்கள் இணையம் வாயிலாகச்  செய்யப்பட வேண்டும் . இதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 27 ஆகும். இந்த நிதி பற்றிய கூடுதல் தகவலுக்கு hey@esportsintegrated.com என்ற  மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :