SELANGOR

சிலாங்கூர் மக்களுக்கு ஓராண்டு கால விமானப் பராமரிப்புப் பயிற்சி- மாநில அரசு வழங்குகிறது

ஷா ஆலம், ஆக 7- சிலாங்கூர் மக்களுக்கு விமான இயந்திர பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பயிற்சியை மாநில அரசு வழங்குகிறது. இந்த ஓராண்டு காலப் பயிற்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் தேர்வு பெறும் பயிற்சி மாணவர்களுக்கு அலவன்ஸ் வழங்கப்படும்.

எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் மற்றும் ஜி.இ. எஞ்சின் சர்வீஸ் மலேசியா சென். பெர்ஹாட் நிறுவனங்களின் ஏற்பாட்டிலான இந்த பயிற்சிக்கு வரும் ஆகஸ்டு  31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கள நிபுணர்களால் மேற்பார்வையிடப்படும் இம்மாணவர்கள் வான் போக்குவரத்து துறை மற்றும் தொழில் துறை சார்ந்த பயிற்சிகளையும் பெறுவர். ஜி.இ. எஞ்சின் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்குரிய வாய்ப்பும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும்.

ஆர்வம் உள்ளவர்கள் 016-9096110 அல்லது 017-3881401 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

விமானத் தொழில் துறையில் ஈடுபடுவதற்கான ஆற்றலை இளைஞர்களுக்கு வழங்கும் நோக்கில் சிலாங்கூர் வான் போக்குவரத்து பயில் நிலை திட்டத்தை எம்.பி.ஐ. கடந்த 2022ஆம் ஆண்டு தொடக்கியது.

வேலை செய்து கொண்ட பயிலும் இந்த திட்டத்தின் கீழ் 50 பயில் நிலை மாணவர்களுக்கு  இயந்திர பராமரிப்பு, மெக்கானிக்கல் மற்றம் எலக்ட்ரிக்கல் துறைகளில்  நுட்ப பொறியியல் பயிற்சி வழங்கப்படும்.


Pengarang :