ஷா ஆலம், ஆகஸ்ட் 8: நேற்றிரவு செக்‌ஷன் 20, ஷா ஆலமில் உள்ள உணவகம் அருகே உள்ள வாய்க்காலில் மொத்தம் 29 மலைப்பாம்புகள் சிக்கின.

இச்சம்பவம் குறித்து தனக்கு இரவு 9.56 மணிக்கு அழைப்பு வந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மலேசியா (ஜேபிபிஎம்) உதவி இயக்க இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

அதைத் தொடர்ந்து, ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஒரு இயந்திரத்துடன் மொத்தம் ஆறு உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

“தீயணைப்பு வீரர்கள் பின்னர் அனைத்து மலைப் பாம்புகளையும் பிடித்தனர்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

12 நிமிடங்களுக்குள் அனைத்து பாம்புகளும் பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டன என அஹ்மட் முக்லிஸ் கூறினார்.

– பெர்னாமா