NATIONAL

டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு 5 சென் குறைக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8: நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு 5 சென் குறைக்கப்பட்டு RM3.30 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும்.

தீபகற்ப மலேசியாவுக்கான டீசலின் சில்லறை விலையை லிட்டருக்கு RM3.30 என நிர்ணயிப்பது, உலக எண்ணெய் சந்தையின் விலையில் தற்போதைய வீழ்ச்சிக்கு ஏற்ப உள்ளது என நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

“அரசாங்கம் சந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து, எண்ணெயின் சந்தை விலைகளின் நகர்வைக் கருத்தில் கொண்டு டீசலின் சில்லறை விலையை மாற்றியமைக்கும் மற்றும் விலை ஸ்திரத்தன்மையை ஆதரிக்கும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

RON97 மற்றும் RON95 பெட்ரோலின் சில்லறை விலைகளும் முறையே லிட்டருக்கு RM3.47 மற்றும் RM2.05 ஆக பராமரிக்கப்படுகிறது.

உலக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

– பெர்னாமா


Pengarang :