SELANGOR

கடல் நீர்மட்ட அளவு உயர்வு – பண்டார் கிள்ளான் நிலையம் எச்சரிக்கை நிலையில் உள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 9: இன்று காலை 10 மணி நிலவரப்படி பண்டார் கிள்ளான் நிலையத்தில் உள்ள நீர்மட்டம் இயல்பான 2.2 மீட்டருடன் ஒப்பிடும்போது 2.4 மீட்டர் அளவாக  உயர்ந்து எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிள்ளான் பகுதியில் மேலும் 11 நிலையங்கள் இயல்பான அளவில் இருப்பதாக மாநில நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை அதன் இணையதளம் மூலம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை போர்ட் கிள்ளான் நிலையத்தில் ஏற்படும் உயர் அலை நிகழ்வு குறித்து விழிப்புடன் இருக்குமாறு கிள்ளான் மாநகராட்சி பொதுமக்களுக்கு நினைவூட்டியது.

இன்று மற்றும் நாளை காலை 8 மணிக்குள் கடல் மட்ட அளவானது 4.8 மீட்டரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூராட்சி சபை தெரிவித்துள்ளது.

அதிக அலைகளின் நிகழ்வு குறிப்பிட்ட பகுதிகளில் நீர் பெருக்கத்தையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் தேசிய ஹைட்ரோகிராஃபிக் மையம் தெரிவித்துள்ளது.

கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அதிக விழிப்புடனும் இருக்கவும், தற்போதைய வானிலை நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், கடலோரப் பாதுகாப்புத் தகவல்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Pengarang :