NATIONAL

மலேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியது தொடர்பில் விசாரணைக்காக முதியவர் கைது

ஈப்போ, ஆகஸ்ட் 12: கோலா கங்சார் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் மலேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியது தொடர்பான விசாரணைக்காக 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

“இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது , விசாரணைக்கு உதவுவதற்காக 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று கோலா கங்சார் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஹெய்ஷாம் ஹருன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்பு) சட்டம் 1963 இன் பிரிவு 5 மற்றும் சிறு குற்றங்கள் சட்டப் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

எனவே, தேசிய மாதத்தை முன்னிட்டு  தேசிய கொடியை ஏற்றும் போது பொதுமக்கள் மிகவும் உணர்வுபூர்வமாகவும் கவனமாகவும் இருக்குமாறு ஹெய்ஷாம் அறிவுறுத்தினார்.

– பெர்னாமா


Pengarang :