NATIONAL

250 ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் சேவையைப் பாராட்ட தேநீர் நிகழ்வு ஏற்பாடு

ஷா ஆலம், ஆகஸ்ட் 12: வீரர்கள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 250 ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கொண்டாடும் வகையில் மூன்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதியம் தேநீர் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோப், கோத்தா அங்கேரிக் மாநில சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி மற்றும் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் ஹரோன் ஆகியோர் செக்‌ஷன் 13இல் உள்ள ஷா ஆலம் கிளப்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

இந்த நிகழ்வின் நோக்கம் தாயகத்தின் பாதுகாப்பை அயராது பாதுகாக்கும் தேசிய வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு ஆகும் என நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.  .

“அவர்களின் சேவையின் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்ற தைரியம் மற்றும் விசுவாசத்தின் சின்னம் ஆகும். அவர்கள் இல்லாமல், இன்று நாம் அனுபவிக்கும் அமைதியை அடைந்திருக்க முடியாது.

இந்த நிகழ்வானது தேசிய வீரர்களை கௌரவப்படுத்தும்  தனது முதல் நிகழ்வாகும். மேலும், இந்த நிகழ்ச்சியை வருடாந்திர நிகழ்வாக மாற்ற திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் அமைதியைப் பாதுகாப்பதற்காக உயிர்நீத்த அதிகாரிகளின் சேவைகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு தினத்தை நிர்ணயித்த அரசாங்கத்தின் முயற்சிகளில் வீரர்கள் தினமும் ஒன்றாகும்.

தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக தேசிய பாதுகாப்பு வீரர்களின் போராட்டம் மற்றும் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஜூலை 31 ம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


Pengarang :