SELANGOR

வெள்ள அபாயத்தில் உள்ள 242 இடங்களில் KDEB கழிவு மேலாண்மை கவனம்  செலுத்துகிறது

ஷா ஆலம், ஆகஸ்ட் 13: இந்த ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படும்
மழைக்காலத்திற்கான தயார் நிலை நடவடிக்கையில் வெள்ள அபாயத்தில் உள்ள 242
இடங்களில் KDEB கழிவு மேலாண்மை கவனம் செலுத்துகிறது.

ஷா ஆலம் மாநகராட்சி நிர்வாகத்தை சுற்றி  வெள்ள அபாய மிக்க  51 ஹாட்ஸ்பாட் பகுதிகளும் அதைத் தொடர்ந்து 47 பகுதிகளைக் கொண்ட அம்பாங் ஜெயா நகராண்மை கழகமும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செயல்பாட்டு பொது மேலாளர் முகமட் இட்ரிஸ்  முகமட் யூசோப் தெரிவித்தார்.

சிலாங்கூர் டிவியின் யூடியூப் தளத்தில் “Hai Selangor“ நிகழ்ச்சியில் விருந்தினராகக்  கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்.

அடுத்த மழைக்காலத்தை எதிர்கொள்ள 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில்
ஈடுபடுத்தப்படுவார்கள் என்று முகமட் இட்ரிஸ் கூறினார்.

வெள்ளத்தின் போது சுத்தம் செய்வதற்கும், தண்ணீர் வடிகட்டுவதற்கான காம்பாக்டர்
லாரிகள் உட்பட 1,178க்கும் மேற்பட்ட கருவிகள் பயன்படுத்தப்படும்.  உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை உள்ளிட்ட பல்வேறு  முகவர்களுடன் இணைந்து பணியை திறம்பட செயல்படுத்துவதை KDEB கழிவு
மேலாண்மை உறுதி படுத்தும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நகர்ப்புறங்களை அடிக்கடி தாக்கும் திடீர் வெள்ளம் குறித்து கருத்து  தெரிவித்த முகமட் இட்ரிஸ், KDEBWM பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  பகுதிகளில் குறிப்பாக உணவகங்களில் கவனம் செலுத்துகிறது என்றார்..

வணிக நடவடிக்கையானது கழிவுகளை நேரடியாக வடிகாலில் கொட்டுவதற்கு  பங்களிக்கும் முறையைக் கொண்டுள்ளது. இதனால் வடிகாலின் நீரோட்டம் தடைப்படுகிறது. .

நாங்கள் நீர் ஓட்டம் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வோம். மேலும்,  சம்பந்தப்பட்ட பகுதிகளில் திடீர் வெள்ளத்தைத் தடுக்கும் பணி அட்டவணை சிறிது மாறும் என்றும் அவர் கூறினார்.

Pengarang :