NATIONAL

2,515 டிங்கி சம்பவங்கள் பதிவு – ஐவர் உயிரிழப்பு

புத்ராஜெயா, ஆகஸ்ட் 15: ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரையிலான 31வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME28) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு (2,609) ஒப்பிடும்போது 2,515ஆகக் குறைந்துள்ளது. மேலும், இக்காலக்கட்டத்தில் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 71,193 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில்
இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 88,255ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்
ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

இவ்வாண்டு 78 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2023 இல் 49 இறப்புகள்
மட்டுமே பதிவாகி இருந்தன, என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

​​மேலும், தொற்றுநோயியல் 31வது வாரத்தில் 95 ஹாட்ஸ்பாட் இடங்கள்
பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

அதாவது சிலாங்கூரில் 75 இடங்களும், நெகிரி செம்பிலானில் 6 இடங்களும், பேராக்கில் 5 இடங்களும், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சபாவில் தலா 3 இடங்களும் கெடாவில் 2 இடங்களும் மற்றும் பினாங்கில் ஒரு இடமும் பதிவாகியுள்ளன.

– பெர்னாமா


Pengarang :