NATIONAL

1,167 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் stepwise OSH என்னும்  நிலை வழிகாட்டல் மேம்பாட்டு திட்டத்தில் (SOLVE 4 SME) பங்கேற்றுள்ளன

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, நாடு முழுவதும் உள்ள 1,167 சிறு மற்றும் நடுத்தர நிறுவன (SME) பணியிடங்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிலை வழிகாட்டல் மேம்பாட்டு  OSH நிலை  (SOLVE 4 SME) திட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இந்த பங்கேற்பு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் இலக்கை தாண்டி 70,824 சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலாளர்கள் பயனடைந்துள்ளதாக அதன் இயக்குனர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

” இத்திட்டம் 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 1,000 சிறு மற்றும் நடுத்தர நிறுவன பணியிடங்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று காஜாங்கில் நடைபெற்ற SOLVE 4 SME மாநாட்டை முன்னிட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து முதல் முறையாக நடைபெறும் இம்மாநாட்டில், 400 சிறு மற்றும் நடுத்தர நிறுவன பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர் மற்றும் இந்நிகழ்வு மனித வள அமைச்சகத்தின் (MOHR) துணைப் பொதுச் செயலாளர் (செயல்பாடுகள்) சுடெக்னோ அஹ்மட் பெலோன் அவர்களால் நடத்தப்பட்டது.

“SOLVE 4 SME“ என்பது சிறு மற்றும் நடுத்தர நிறுவன துறையில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரங்களை மேம்படுத்துவதற்காக தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் வழியாக மேற்கொள்ளப்படும் மனித வள அமைச்சகத்தின் ஒரு முறையான திட்டமாகும்.

– பெர்னாமா


Pengarang :