NATIONAL

பழுதடைந்த சாலைகள் பற்றி 689 புகார்களை இன்ஃப்ராசெல் பெற்றுள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 16: கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஜூலை வரை பழுதடைந்த சாலைகள் மீதான  689 புகார்களை மாநில சாலை பராமரிப்பு நிறுவனமான இன்ஃப்ராசெல் பெற்றுள்ளது.

அதில் 2021 இல் 105 புகார்கள், 2022இல் 194 புகார்கள், 2023இல் 156 புகார்கள் மற்றும் இந்த ஆண்டு ஜூலை வரை 234 புகார்கள் என ஒவ்வொரு ஆண்டும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எக்ஸ் பக்கத்தின் மூலம் இன்ஃப்ராசெல் தெரிவித்துள்ளது.

அதில் கிள்ளான் மாவட்டத்தில் 298 புகார்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து பெட்டாலிங்கில் (174), உலு லங்காட்டில் (74), கோம்பாக்கில் (40), கோலா சிலாங்கூரில் (38), சிப்பாங்கில் (26), கோலா லங்காட்டில் (18), உலு சிலாங்கூரில் (11) மற்றும் சாபக் பெர்ணமில் (10) புகார்கள் என பதிவாகின.

“சிலாங்கூர் பொதுப்பணித்துறை (ஜேகேஆர்) இன்ஃப்ராசெல் உடன் இணைந்து 2021 முதல் கடந்த ஜூலை வரை 19,474 இடத்தில் ஓட்டும் முறையை செயல்படுத்தியுள்ளது.

முன்னதாக, சாலைகள்  நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காகப் பயனர்களின்  பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், RM 20 மில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய, மெகா சாலை சீரமைப்பு பணிகள்  இந்த ஆண்டும் தொடர்ந்து செயல் படுத்தப்படும் என உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.


Pengarang :