NATIONAL

உயர்நெறியுடன் ஊதிய உயர்வு பிணைக்கப்படுகிறது, தவறுகளைக் கண்டிக்கத்தவறினால் பதவி உயர்வு இல்லை

புத்ராஜெயா, ஆக.16 – கீழ்நிலை அதிகாரிகளின் தவறான நடத்தைகள் குறித்து புகாரளிக்கத் தவறும் துறைத் தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் அதேவேளையில் அவர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும்.

மலேசிய சம்பளத் திட்டத்திற்குப் பதிலாக அமலாக்கப்பட்டுள்ள பொது சேவை  சம்பள முறைத் திட்டத்தில்  (எஸ்.எஸ். பி.ஏ ) உயர்நெறி மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பொதுச் சேவைத் துறை ஊழியர்களிடையே முறைகேடு தொடர்பான சம்பவங்களைத் தவிர்க்க பணி சுழற்சி முறையை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று துறைத் தலைவர்களை அவர் வலியுறுத்தினார்.

அலுவலகம் மற்றும் பள்ளியின்  தோற்றத்தைக் கட்டிக் காக்க விரும்பும் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், பள்ளியில் (மாணவர்கள்) துன்புறுத்தப்பட்டு  குற்றுயிரும்  குலையுயிருமாக கிடந்தாலும் காவல்துறையில் புகார் அளிப்பதில்லை.

சில துறைத் தலைவர்கள் அல்லது அதிகாரிகளிடம் அதிக செல்வம் இருப்பதை அதிகாரிகள் அறிந்த  உள்ளனர். ஆனால், அதைப் பற்றி அவர்கள் புகாரளிப்பதில்லை. ஆகவே, அது குறித்து தெரிவிக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் துறைத் தலைவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்காது  என்று அவர் கூறினார்.

பிற புதுப்பிப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:

• சிஜில் பெலஜாரான் மலேசியா (எஸ்.பி.எம்.) அல்லது அதற்கு இணையான குறைந்தபட்ச கல்வி தகுதியின் தேவை.

• பல பணித் திறன் மற்றும் செயல் திறன்களை ஊக்குவித்தல்

• பொருத்தமற்ற, ஒன்றுடன் தொடர்பு படுத்தும் அல்லது  அவசியமற்ற சேவைகள் மற்ற துறைகளுக்கு மாற்றப்படும்

• நடப்புத்  தேவைகளின் அடிப்படையில் பணி கிரேடுகளை   ஒருமுகப்படுத்துதல் மற்றும் மறு வகைப்படுத்துதல்

• சிறந்த திறமையாளர்களை பெறுவதற்கு 17 சேவை திட்டங்களை நியமிப்பதற்கான நிபந்தனைகளில் மாற்றம்

• அமைச்சுக்கள் மற்றும் ஏஜென்சிகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிய துறைசார் தணிக்கை முறை

• சமமான துறையில் நாட்டிற்கு வெளியே உள்ள பிரதிநிதிகளுடன் வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறை


Pengarang :