இரவல் தந்த மோட்டார் சைக்கிள் திரும்பக் கேட்டவருக்கு  கத்திக் குத்து- செமினியில் சம்பவம்

கோலாலம்பூர், ஆக. 18- சிலாங்கூர் மாநிலத்தின் செமினியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  தனது நண்பருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆடவர்  ஒருவர் உடலில் நான்கு  முறை கத்தியால்  குத்தப்பட்டு  காயங்களுக்குள்ளானார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாலை  பிற்பகல் 2.52 மணிக்கு தங்கள் தரப்புக்கு அறிக்கை புகார் கிடைத்ததாக  காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசுப் கூறினார்.

கடந்த மாதம் நண்பரிடம்  இரவலாகப் பெற்ற மோட்டார் சைக்கிளை சந்தேக நபர் திருப்பித் தராததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த தாக்குதலுக்கு  காரணமாக   அமைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தேக நபரை தனது  சகோதரியின் வீட்டில் சந்தித்த பாதிக்கப்பட்ட ஆடவர் அவரைக் கடிந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தேக நபர் அவரைத் துரத்திச் சென்று கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார் என்று நாஸ்ரோன்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குவாரி உதவியாளராக பணிபுரியும் 23 வயதான பாதிக்கப்பட்ட ஆடவர் இடுப்பின் பின்புறம் மற்றும் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காயங்களுக்காக தற்போது காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் உடல்  நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 30 வயதுடைய நபரை தாங்கள் தேடி வருவதாகக் கூறிய அவர், குற்றவியல் சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் இவ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது எனத்  தெரிவித்தார்.


Pengarang :