NATIONAL

குரங்கம்மை மீது அனைத்துலக அவசரநிலை பிரகடனம் – மலேசிய நுழைவாயில்களில் தீவிர கண்காணிப்பு

புத்ராஜெயா, ஆக.19 – எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய்ப் பரவல்
தொடர்பில் அனைத்துலக நிலையிலான சுகாதார அவசரநிலை
பிரகனப்படுத்தப்பட்டத்தைத் தொடர்ந்து நாட்டின் நுழைவாயில்களில்
கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு
தீவிரப்படுத்தவுள்ளது.

நாட்டிற்குள் நுழையும் எம்பாக்ஸ் நோய்ப் பீடித்த அனைத்துப் பயணிகளும்
மலேசியாவுக்குள் நுழைந்த 21 தினங்களுக்கு நோய்ப் பரவல் அறிகுறி
உள்ளிட்ட சோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வர வேண்டும்
என அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சொறி போன்ற
அறிகுறிகளைக் கொண்டவர்கள். இந்நோய் மற்றவர்களும் பரவாமல்
தடுப்பதற்கு ஏதுவாக முன்கூட்டியே மருத்துவமனைகளில் பரிசோதனை
மேற்கொள்ள வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.

தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏதுவாக
எம்பாக்ஸ் நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் நோய்க்கான
அறிகுறிகளைக் கொண்டவர்களின் தகவல்களை உடனடியாக
மாவட்ட சுகாதார இலாகாவிடம் தெரிவிக்கும்படி அரசாங்க மற்றும்
தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள்
பணிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோய் தொடர்பில் சுகாதார அமைச்சின் அகப்பக்கத்தில் இடம்
பெற்றுள்ள மலேசிய எம்பாக்ஸ் மேலாண்மை மீதான 2023 வழிகாட்டியை
மருத்துவர்கள் பார்வையிடலாம்.

சருமச் சார்ந்த சேவைத் துறைகள் குறிப்பாக ஸ்பா, உடம்புபிடி
நிலையங்கள் மற்றும் இதர நோய் பரவல் சாத்தியம் உள்ள
நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வாடிக்கையாளர்களுக்கு எம்பாக்ஸ் நோய் பரவாமலிருப்பதை உறுதி செய்ய சுற்றுப்புறங்களை சுத்தமாக
வைத்திருக்கும் அதேவேளையில் உயர்ந்தபட்ச பாதுகாப்பை
கடைபிடிக்கும்டியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Pengarang :