NATIONAL

இலவசச் சிலாங்கூர் 1000 டிஜிட்டல் திட்டம் – 200 பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஆகஸ்ட் 19: உலு லங்காட்டில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள சிலாங்கூர் 1000 டிஜிட்டல் திட்டத்தின் வழி மொத்தம் 200 பங்கேற்பாளர்கள் இலவச டிஜிட்டல் தொழில் முனைவோர் வழிகாட்டுதலைப் பெறுவதற்கான வாய்ப்பு பெறுவர்.

இந்நிகழ்ச்சி ஶ்ரீ செம்பகா, காஜாங் மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார கழகம் (சிடேக்) தெரிவித்துள்ளது.

“TikTok Shop, Touch ‘n Go eWallet, Maxis Business மற்றும் பல தொழில் வல்லுனர்களிடம் இருந்து இலவசமாக வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

“200 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

முன்னதாக உள்ளூர் தொழில் முனைவோர் மத்தியில் டிஜிட்டல் மாற்றத்தை விரிவுபடுத்த சிலாங்கூர் 1000 டிஜிட்டல் திட்டத்தை , மாநில அரசாங்கத்தின் தொழில் முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி அறிமுகப்படுத்தினார்.

பெட்டாலிங், சபாக் பெர்ணம், சிப்பாங், உலு லங்காட் மற்றும் கோம்பாக் ஆகிய மாவட்டங்களில் தொடங்கி ஐந்து இடங்களுக்கு இந்தத் திட்டம் பயணித்தது. இந்த திட்டம் சிடெக், எம்பிஐ, Selangor State Economic Planning Unit (Upen) மற்றும் பிளாட்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பாகும்.

இந்த திட்டத்தில் டிஜிட்டல் வணிக மேலாண்மை மற்றும் சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை உருவாக்கும் நுட்பங்கள் உள்ளிட்ட 10 பயிற்சி தலைப்புகள் உள்ளன, இதன் மூலம் அவர்கள் வருமானம் மற்றும் சேவைகளை உருவாக்க முடியும்.


Pengarang :