SELANGOR

சுமார் 2,000 இலவச ஜாலோர் ஜெமிலாங்கைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி விநியோகித்தது

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 19: சுதந்திர மாதக் கொண்டாட்டத்தை முன்னிட்டு குடியிருப்பாளர்களுக்கு சுமார் 2,000 இலவச ஜாலோர் ஜெமிலாங்கைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) விநியோகித்தது.

ஒவ்வொரு வளாகத்திலும் மலேசியக் கொடியைப் பறக்கவிடுவதை ஊக்குவிக்கும் முயற்சியில் ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினர் மூலமாகவும் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாகப் பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.

“குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்க அனைத்து கவுன்சிலர்களுக்கும் 2,000 இலவச மலேசியக் கொடிகள் வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து வளாகங்களில் ஜாலோர் ஜெமிலாங்கைப் பறக்கவிட ஊக்குவிக்கப்படும்.

“இந்த ஆண்டு சுதந்திர மாதத்தை கொண்டாடும் வகையில் கவிதை மற்றும் தேசப்பற்று பாடல் போட்டிகள் உட்பட 23 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் சுதந்திர உணர்வைத் தூண்டுவதற்காகக் கடந்த வாரம் முதல் மெனாரா எம்பிபிஜேயில் மாபெரும் தேசியக் கொடியை எம்பிபிஜே பறக்கவிட்டது என்று முகமட் ஜாஹ்ரி மேலும் கூறினார்.

“இது இந்த ஆண்டு தேசிய மாதத்தை கொண்டாடுவதற்கான எங்கள் ஆதரவின் அடையாளமாகும். சுற்றியுள்ள பகுதிகளும் ஜாலோர் ஜெமிலாங்கை பறக்கவிட தொடங்கியுள்ளன, இது ஒரு நல்ல விஷயம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :