NATIONAL

போர்ட் கிள்ளானில் எதிர்வரும் திங்கள் வரை கடல் பெருக்கு அபாயம்

ஷா ஆலம், ஆக. 21- இம்மாதம் 26ஆம் தேதி  வரை ஏழு நாட்களுக்கு போர்ட் கிள்ளான் நிலையத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும்  பெரும் கடல் பெருக்கு அபாயம்  குறித்து   விழிப்புடனும் தயார் நிலையிலும்  இருக்குமாறு பொதுமக்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  காலை கடலில் நீர் மட்டம்  5.5 மீட்டரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு சமூக ஊடகங்களில் வெளியிட்ட விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று மதியம் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும்,  வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவில்  மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதே வானிலை  வரும் ஆகஸ்டு 24ஆம் தேதி  சனிக்கிழமை முதல் 26ஆம் தேதி  திங்கள் வரை காலை வேளையில்  ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதவி மற்றும் கூடுதல் தகவலுக்கு, பொதுமக்கள்  999 என்ற அவசரகால தொலைபேசி எண்ணில்  அல்லது 03-33716700 என்ற எண்ணில்   கிள்ளான் மாவட்ட பேரிடர் நடவடிக்கை மையத்தை அல்லது  0109731963 என்ற எண்ணில் புலனம் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.

இதனிடையே, இன்று மதியம் 12.15 மணி நிலவரப்படி, கோல சிலாங்கூர் மாவட்டத்தின்  சுங்கை பூலோ, பாரிட் மஹாங்கில் உள்ள  உள்ள  ஒரு நிலையம் மட்டுமே  எச்சரிக்கை அளவான 3.94 மீட்டர் நீர் மட்டத்தை   பதிவு செய்தது.


Pengarang :