NATIONAL

மலேசிய ஓராங் உத்தான் பாதுகாப்புத் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகள் வரிச் சலுகைக்கு தகுதியுடையவை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – மலேசிய ஓராங் உத்தான் பாதுகாப்புத் திட்டத்திற்கு
வழங்கப்படும் நன்கொடைகள், செம்பனை தொழில் நிறுவனங்களிடமிருந்து வரும் நிதி
உட்பட அனைத்தும் வரிச் சலுகைக்கு தகுதியுடையதாக இருக்கும் என்று மேற்பார்வை
அறக்கட்டளை இன்று தெரிவித்துள்ளது.

நிவாரணத் தொகை குறிப்பிடப்படவில்லை என்றாலும், வருமான வரிச் சட்டம் 1967ன்
கீழ் வரிச் சலுகை அளிக்கப்படும் என்று மலேசியன் செம்பனை பசுமைப் பாதுகாப்பு
அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஓராங் உத்தான் பாதுகாப்பு திட்டத்தை மேற்பார்வையிடும் திட்டமானது பெருந்தோட்டம்
மற்றும் பொருட்கள் அமைச்சினால் வழிநடத்தப்படுகிறது.

ஓராங் உத்தான்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. போர்னியோ தீவில் அவைகளின்
எண்ணிக்கை 105,000க்கும் குறைவாக இருப்பதாக பாதுகாப்புக் குழுவான WWF
மதிப்பிட்டுள்ளது.

"ஓராங் உத்தானுக்கான உணவு ஆதாரமான வன மரங்கள் மற்றும் பழங்களை நடவு
செய்வதற்கும் நிதியைப் பயன்படுத்தப்படலாம் என அறக்கட்டளையின் பொது மேலாளர்
ஹைருலாசிம் மாமுட் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மலேசியாவிலிருந்து செம்பனை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஓராங் உத்தானை
தத்தெடுக்க முடியும். ஆனால், அவைகள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாது
என்று தோட்ட மற்றும் பொருட்கள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி
கூறினார்.

– ராய்ட்டர்ஸ்


Pengarang :