ஷா ஆலம், ஆகஸ்ட் 21: டூசுன் துவா தொகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டப்படும்.

இது அவசர சம்பவங்களுக்கு உதவுவதோடு அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சிறந்த சேவையை வழங்க வசதியாக இருக்கும் என அதன் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் கூறினார்.

“டூசுன் துவா பகுதியில் இன்னும் தீயணைப்பு நிலைய வசதி இல்லை. தீ விபத்து ஏற்பட்டால் பாங்கி, காஜாங் மற்றும் பிற இடங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வருகிறார்கள்.

அருகில் உள்ள தீயணைப்பு நிலையம் டூசுன் துவா பகுதியை அடைய சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்பதால், இத்தொகுதியில் தீயணைப்பு நிலையத்தின் கட்டுமானம் அவசரத் தேவை என்று ஜோஹன் கூறினார்.

“அதன் மூலம் விரைவான சேவையை வழங்க முடியும்,” என்று அவர் இன்று மீடியா சிலாங்கூரில் “Apa Cer YB Musim 2“ ஆடியோ நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின் போது கூறினார்.

தீயணைப்பு நிலையத்திற்கு கூடுதலாக, அத்தொகுதியில் அதிகமாணவர் பிரச்சனையை சமாளிக்க ஒரு புதிய தளத்தில் பள்ளியை கட்டுவதற்கான திட்டங்களையும் அவர் தெரிவித்தார்.

“தீயணைப்பு நிலையம் தவிர, அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகள் போன்ற பிற உள்கட்டமைப்புகளும் புதிய தளங்களில் கட்டப்படும்.