NATIONAL

கவலைக்குறிய  அளவில் மாணவர்களிடையே பார்வைக் குறைபாடு அதிகரித்துள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – பள்ளி மாணவர்களிடையே பார்வைக் குறைபாடு பிரச்சனை கவலைக்குரிய நிலையில் உள்ளதை“மாத்தா ஹாதி விலயா“ பரிசோதனை திட்டத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இதுவரை கிடைத்த புள்ளி விவரங்களின்படி, கடந்த ஜூன் மாதம் திட்டம் தொடங்கிய லிருந்து 2,077 மாணவர்களில் 58.2 சதவீதம் பேருக்கு பார்வை மங்கலாக இருப்பது கண்டறியப்பட்டது என பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பகுதிகள்) டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.

“பரிசோதனையின் போது, ஆண்டு 1 மாணவர்களுக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அதை அறியாமல் இருக்கிறார்கள். இது நிச்சயமாக அவர்களின் படிப்பை பாதிக்கும்.

மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கோலாலம்பூர் கூட்டரசு பகுதி அளவிலான எஸ்பிஎம் சிறப்புக் கருத்தரங்கு நிகழ்ச்சியின் போது, “இந்தப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுக் காண விட்டால், மாணவர்கள் கற்றலில் பின்தங்கக் கூடும்” என்று அவர் கூறினார்.

மாத்தா ஹாதி விலாயா திட்டம் உசாஹா ஜெய இன்சான் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என டாக்டர் ஜாலிஹா கூறினார். இந்த திட்டம் கூட்டரசு பிரதேசங்கள் முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களிடையே கண் சுகாதார பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்டத்தில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் புக்கிட் பந்தாய், டேசா தாசிக் மற்றும் வங்சா மாஜு செக்‌ஷன் 1 ஆகிய தேசியப் பள்ளிகளும் அடங்கும்.

– பெர்னாமா


Pengarang :