NATIONAL

எதிர்வரும் திங்கட்கிழமை மினரா கோலாலம்பூரில் ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிடும் நிகழ்வு ஏற்பாடு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – இந்த ஆண்டும் மாபெரும் ஜாலூர் கெமிலாங் பறக்க விடுவதற்கான அதன் பாரம்பரியத்தை மீண்டும் மினரா கோலாலம்பூர் தொடர்கிறது. எதிர்வரும் திங்கட்கிழமை கோலாலம்பூர் கோபுரத்தின் உச்சியில் இந்த கொடியேற்ற’ நிகழ்வு நடைபெறவுள்ளது.

மக்களிடையே தேச பற்றை ஊன்ற அரசாங்கம் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 67வது தேசிய தின கொண்டாட்டங்களை  மேலும் சிறப்பிக்க,  நாட்டின் அடையாளமான 421 மீட்டர்  உயர  கோபுரத்தில் கொடி ஏற்ற  நிகழ்வை மினாரா கோலாலம்பூர் எஸ்டிஎன் பிஎச்டி  செய்வதாக  அதன் தலைமை நிர்வாக அதிகாரி நஸ்லி சாட் கூறினார்.

“அனைத்து மதங்கள், இனங்கள் மற்றும் பின்னணியை சேர்ந்த மலேசியர்களை ஒன்றிணைக்க முடியும் என்ற நம்பிக்கையில் காலை 9 மணிக்கு நடைபெறும் இந்த ‘அன்பாக்சிங்’ நிகழ்வில் மக்கள் ஒன்று கூடி ஆதரவளிக்க வேண்டும்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தேசிய மாதத்தை முன்னிட்டு மலேசியா தினம் (செப்டம்பர் 16) வரை நடைபெறும் சிறப்பு நடவடிக்கைகளின் நுழைவு டிக்கெட்டுகளுக்கு 60 சதவீத தள்ளுபடி வழக்கும் விளம்பரத்தையும் மெனரா கோலாலம்பூர் வெளியிட்டது

அதில் தேசியக் கொடியின் வண்ணங்களைக் கொண்ட கோபுரத்தின் விளக்குகள், சுதந்திர (மெர்டேக்கா) தினக் கவிதைப் போட்டி, பாரம்பரிய விளையாட்டு அறை, இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் பங்கேற்கக் கூடிய பிற நிகழ்வுகள் ஆகியவை அடங்கும்.

இந்நிகழ்வுகள் மற்றும் விளம்பரங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை மெனாரா கோலாலம்பூரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களில் காணலாம் அல்லது வாடிக்கையாளர் சேவை லைன் 03-2020 5421 அல்லது www.kltower.com.my இல் தொடர்பு கொள்ளலாம்.

– பெர்னாமா


Pengarang :