NATIONAL

கிள்ளான் ஐமேக் சீனா முஸ்லீம் மசூதி பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 26: கிள்ளான் ஐமேக் சீனா முஸ்லீம் மசூதி 2.98 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இது பண்டார் பொத்தானிக் கிள்ளானில் அமைந்துள்ளது. இந்த மசூதி ஒரே நேரத்தில் 1,000 பேருக்கு இடமளிக்கும் மற்றும் கடந்த வியாழன் முதல் முஸ்லிம்களுக்கு திறக்கப்பட்டது.

சிலாங்கூரில் சீனக் கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்ட இந்த மசூதி ஒரு தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளது. மேலும், இது பாரம்பரிய சீன அம்சங்கள் கொண்ட பிரார்த்தனை மண்டபத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீன கையெழுத்து மிஹ்ராப் இடத்தை அலங்கரிக்கிறது.

இந்த மசூதி RM30 மில்லியன் மதிப்பில் நான்கு மாடி கட்டிடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நூலகம், விரிவுரை அறைகள், ஓய்வறைகள், நினைவு பரிசு கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

மே 2019இல் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஒப்புதல் அளித்த பிறகு, சிலாங்கூர் அரசாங்கம், மலேசியாவின் சீன முஸ்லீம் கழகம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த மசூதி கட்டுமானத்திற்கு நிதியளிதத்தனர்.


Pengarang :