SELANGOR

ரவாங் இந்திய சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் மலையேறும் நிகழ்வு- 50 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், ஆக. 26 – ரவாங் தொகுதி இந்திய சமூகத் தலைவர்
தேவசெல்வன் அந்தோணிசாமி ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டிற்கான
மலையேறும் நிகழ்வு ரவாங் பைபாஸ் பகுதியில் அண்மையில்
நடைபெற்றது. ரவாங் மற்றும் கோம்பாக் வட்டார மக்களுக்காக
நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்
உள்பட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் உடலாரோக்கியத்தைப்
பேணிக்காப்பதன் அவசியத்தையும் பொதுமக்கள் மத்தியில் வலியுறுத்தும்
நோக்கில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தேவசெல்வன்
கூறினார்.

நாம் எப்போதும் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு
உடற்பயிற்சி மிக முக்கியமாகும். அதன் அடிப்படையில் தொகுதி மக்கள்
மத்தியிலும் உடற்பயிற்சி மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்த
நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தோம் என அவர் சொன்னார்.

முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த மலையேறும் நிகழ்வுக்கு பொது
மக்கள் மத்தியில் சிறப்பான ஆதரவு கிடைத்துள்ளதாகக் கூறிய அவர்,
வரும் நவம்பர் மாதம் ரவாங்கில் கபடிப் போட்டியை நடத்துவதற்கும்
தாங்கள் திட்டமிடுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக உடல் ஆரோக்கியம் தொடர்பான
விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :