NATIONAL

புரோட்டன் பங்குகளை வெளிநாடு முதலீட்டாளர்களுக்கு விற்பதில் விவேகம் வேண்டும்

ஷா ஆலாம் – புரோட்டன் பங்கினை சம பங்குடன் விற்பனை செய்வது  என்பது நாட்டின் சொத்தினை விற்பதற்கு ஈடானது என  தேஜா சட்டமன்ற உறுப்பினர்  சாங் லீ காங் குறிப்பிட்டார்.

இவ்வாறு செய்வதால் நாட்டின் அடையாளமாக விளங்கிய புரோட்டன் அதன் சின்னம்,வடிமைப்பு,தன்மை உட்பட அதன் அனைத்து இயல்பியலையும் நாம் தொலைக்க நேரிடும் என்றார்.

வெளிநாடு பங்குதாரர்களுக்கு நாட்டின் சொத்தினை சமபாதியாய் வழங்குவது என்பது மலேசியர்களுக்கு கிடைத்த பெரும் அவமானம் என்றும் கூறிய அவர் இது தொடர்ந்தால் நாளை இச்சிக்கல் ஒரு தொடர் சங்கிலியை போல மலேசியர்களை அரித்துக் கொண்டே இருக்கும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

 

 

Chang Lih Kang

 

 

இதன் மூலம் மலேசிய தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.உள்ளூர் தொழிலாளர்களை காட்டிலும் குறைந்த ஊதியத்திற்காக  அந்நிய தொழிலாளர்களை தருவிப்பதில் தான் வெலிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்புவர் என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

அதேவேளையில்,நிபுணத்துவ துறைகளுக்கும் உள்ளூர் தொழிலாளர்களை காட்டிலும் அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு ஆளுமை கொண்டிருக்கும் ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளின் தொழிலாளர்கள் தான் அவர்களின் இலக்காக இருக்கும் என்றும் நினைவுறுத்தினார்.

இதற்கிடையில்,நாட்டில் நிதி அமைச்சரின் நிர்வாகத் திறன் மீது சந்தேகம் எழுவதோடு அவரது செயல்பாடுகள் அரசியல் நிலையிலானது மட்டுமா எனவும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது என்றார்.அல்லது முன்னால் பிரதமர் துன் மகாதீரின் புகழையும் அவரது தனித்துவ திறனையும் மறைக்கும் முயற்சியாய் புரோட்டோன் பங்குகள் இம்மாதிரி விற்கப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

 

 

proton_logo                     விவேகமாய் சிந்தித்தால் அரசாங்கம் நாட்டின் மேம்பாட்டிலும் உயர்விலும் தான் பெரும் கவனம் செலுத்த வேண்டும்.அதேவேளையில்,நாட்டின் அடையாளமாகவும் பெருமிதமாகவும் திகழ்ந்திடும் சுவடுகளில் தனித்துவம் கவனம் செலுத்தி புதியதொரு தடம் நோக்கி வெற்றியினை பதிவு செய்ய முன் வர வேண்டும் என்றார்.உலக சந்தையில் தனித்துவமாய் திகழ்வதற்கும் வழிகோல வேண்டும் என்றார்.

புரோட்டோனின் 51 விழுகாடு பங்கினை உள்ளூர்வாசிகள் கொண்டிருப்பதுதான் விவேகம்.அதற்கான சாத்தியத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன் வரவேண்டும்.அதைவிடுத்து அதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆளுமை கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அதேவேளையில்,அம்னோ தேசிய முன்னணி தனது 13வது பொது தேர்தலின் தேர்தல் கொள்கையில் குறிப்பிட்டிருந்த தேசிய கார்களின் விலை குறைப்பினை மறந்து விடக்கூடாது என்றும் நினைவுறுத்தினார்.

 


Pengarang :