SELANGOR

யுனிசெல்: ரெய்தாக்கு பல்கலைக் கழகத்துடன் தொடர்பு ஏற்படும்

ஷா ஆலம் 18 ஏப்ரல்:

சிலாங்கூர் பல்கலைக் கழகம் (யுனிசெல்) மற்றும் ரெய்தாக்கு பல்கலைக் கழகமும் இருவழி தொடர்பு  ஏற்படுத்த புரிந்துணர்வு  ஒப்பந்தம் கையெழுத்தாகும்  என  எதிர் பார்க்கப்படுகிறது.

மாணவர் விவகார உதவி துணை வேந்தர், பேராசிரியர் முனைவர் ஷாரூடின் படரூடின் கூறுகையில் மேற்கண்ட விவரங்கள் ரெய்தாக்கு பல்கலைக் கழகத்தின் பொருளாதார பேராசிரியர் முனைவர் லாவ் சிம் யியுன் தெரிவித்தாக  கூறினார்.

” நாங்கள் ரெய்தாக்கு பல்கலைக் கழகத்தினுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள  குறிப்பாக  வியாபாரம், நன்னடத்தை மற்றும் பல துறைகளில் பரிமாற்றம் செய்ய முடியும். ”

” இது யுனிசெல்லுக்கு இருவழி தொடர்பை மேம்பாடுத்திக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் என்றும் குறிப்பிட்டார்.”

டாருல் இசான் கழகத்தின்  இயக்குனருமான அவர், முனைவர் சிம் யின் ” எப்படி மலேசியா தொழில் நுட்பத் துறையில் மேம்பாடு அடையும்  வழிகள்” என்ற தலைப்பில் நடந்த விவாதத்தின் பின்பு இதைக் கூறினார்.

 


Pengarang :