SELANGOR

மந்திரி பெசார்: பொருளாதார மந்த நிலையில், சிலாங்கூரில் முதலீடு தொடர்ந்து அதிகரிப்பு

ஜோர்டான், மே 3:

நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில்  இருந்தாலும் மாநில அரசாங்கத்தின் வெளிப்படையான நிர்வாகம், சிலாங்கூரில் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில்,     கடந்த ஆண்டு வெளிநாட்டு முதலீடுகள் ரிம 3 பில்லியன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டியதோடு இதில் தொயோதா மற்றும் ரோல்ஸ் ரோய்ஸ் போன்ற ராட்சத நிறுவனங்களும் அடங்கும் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், மலேசியா மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கையின்மை மற்றும்  அரசியல் குழப்பங்கள் இருக்கும் பட்சத்தில் சிலாங்கூர் தொடர்ச்சியாக முன்னணியில் உள்ளதை மலேசியா பொருளாதார ஆய்வு மையத்தின் அறிக்கையின் அடிப்படையில் தெரிகிறது என்று விவரித்தார்.

”   சிலாங்கூர் மக்களாக  இருப்பதற்கு  ஆண்டவனிடம் நன்றி தெரிவிப்பதோடு, புத்ராஜெயாவின் பொருளாதார நடவடிக்கைகள் மோசமான நிலையில் இருப்பதாக ஒத்துக் கொள்ள வேண்டும்  ஏனெனில் இந்த நிலையினால் மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்கிறார்கள். இரு ராட்சத நிறுவனங்களும் சிலாங்கூர்  ஊழல் மற்றும் கொடுங்கோல் ஆட்சியாக இருந்தால் முதலீடு செய்து இருக்க மாட்டார்கள். வெளிப்படையான போக்கு பொறுப்புள்ள நிர்வாகம் ஆகியவை நேர்மையான அரசாங்கத்தின் அடையாளம்,” என்று கூறினார்

”   சிலாங்கூரின் கஜானா ரிம 3.6 பில்லியன்  எட்டியது இமாலய சாதனையாகும். நமது சேமிப்பு  அதிகமாக இருப்பதால் ஜோர்டான் நாட்டில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்ய முடிகிறது,” என்று இர்பிட் நகரில் இருந்து சிலாங்கூர் கினிக்கு கூறினார்.

இவ்வேளையில், முகமட் அஸ்மின் அலி பேசுகையில் முதலீடு முயற்சிகளில் தைவான் நாடு சிலாங்கூரை மையமாகக் கொண்டு ஆசியான் மற்றும்  அரபு  இஸ்லாமிய நாடுகளில் தனது சந்தையை விரிவாக்கம் செய்ய முனைப்பு காட்டுகிறது.


Pengarang :