SELANGOR

மாநில அரசாங்கத்தின் நற்பெயரை களங்கப்படுத்த சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவல் என்று தவறான பிரச்சாரம்

ஷா ஆலம், மே 4:

கோத்தா அங்கிரிக் சட்ட மன்ற உறுப்பினர் யாக்கோப் சப்பாரி, தானும் நான்கு கெஅடிலான் சட்ட மன்ற உறுப்பினர்களும் கட்சியை விட்டு விலகி சுயேட்சை உறுப்பினர்களாக உள்ளனர் என்று சமூக வலைதளங்களில் வெளியிட்ட செய்தியை முற்றிலும் மறுத்தார்.

இந்த வதந்தி பரவியது  அம்னோ தேசிய முன்னணியின் மலிவான பிரச்சாரம்  என்றும்  எல்லோரும் பிஎன் கூட்டணியின் வியூகத்தின் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் 14-வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஒற்றுமையை குலைக்க செய்யும் முயற்சி இது என்றும் குறிப்பிட்டார்.

யாக்கோப் மேலும் விவரிக்கையில், பாஸ் கட்சியின் சட்டமன்ற  உறுப்பினர்கள்  இன்னும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் அரசாங்கத்தில் இருந்து வெளியாகவில்லை என்றும் கூறினார்.

”   முகமட் அஸ்மின் அலியின் சிலாங்கூர் மாநில அரசாங்கம் பலத்துடன் உள்ளதாக உறுதி அளிக்கிறேன். எந்த ஒரு பாஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மக்களின் நல்வாழ்விற்கு நாம் தொடர்ந்து மறுமலர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவோம். நாங்கள் முடிந்த அளவு அம்னோ பிஎன் உடன் நேருக்கு நேர் மோதல் நடத்த ஆயுத்தம் செய்கிறோம்,” என்று தன்  அகநூலில் கூறினார்.

YAAKOB

 

 

 

 

 

 

 

மேலும் கூறுகையில், யாக்கோப் நேற்று முழுவதும் தனது சட்ட மன்ற  அலுவலகத்தில் மக்களை சந்தித்தும் பெடுலி சேஹாட் சுகாதார அட்டைகளை விநியோகம் செய்ததாக கூறினார்.

யாக்கோப், செமந்தா சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி, பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் மற்றும் ஈஜோக் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அமாட் ஆகியோர் கெஅடிலான் கட்சியில் இருந்து விலகி முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம்  உடன் சேர்ந்து சிலாங்கூர் சுல்தானை சந்திக்கிறார்கள் என்று பரபரப்புச் செய்தி நேற்று முழுவதும் பரவியது குறிப்பிடத்தக்கது.


Pengarang :