SELANGOR

1,000 எம்பிஎஸ்ஏ பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை

ஷா ஆலம், மே 5:

கிட்டத்தட்ட 1000 ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் (எம்பிஎஸ்ஏ) பணியாளர்கள் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் நிபுணர்களின் மருத்துவ  ஆலோசனைகளும் சுகாதார வார நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. எம்பிஎஸ்ஏ-வின் நிறுவன தொடர்பு மற்றும் பொதுத் தொடர்பு பிரிவின் தலைவர் ஷாரின் அமாட் கூறுகையில் இந்த வருடாந்திர நிகழ்ச்சி பணியாளர்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கும் உணர்வைத் தூண்ட நடத்தப்பட்டது என்று விவரித்தார்.

மேலும் விவரிக்கையில், இரத்த அழுத்தம், உடல் எடை நிறுவை, இனிப்பு நீர் பரிசோதனை மற்றும் கோலஸ்டுரோல் அளவு சோதனை போன்ற அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் இடம் பெற்றுள்ளது என்றார்.

”   மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சி எம்பிஎஸ்ஏ-வின் தனது நிர்வாகத்தில் கீழ் வேலை செய்யும் பணியாளர்கள் சிறந்த முறையில் சுகாதாரத்தை பேணிக் காக்கும் உணர்வு இருக்க வேண்டும். இந்த நடவடிக்கை பணியாளர்களுக்கு சிறந்த பலனை தந்துள்ளது. தொடர்ந்து தனது பணியாளர்கள்  எம்பிஎஸ்ஏ-விற்கு தரமான சேவையை வழங்கவும் மற்றும் ஷா ஆலம் மாநகராட்சியில் கீழ் வாழும் மக்களுக்கு சிறந்த முறையில் சேவை முறையில் சேவையாற்ற முடியும்,” என்று கூறினார்

IMG_9924

 

 

 

 

 

எம்பிஎஸ்ஏ பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேசிய இரத்த மையத்தின்  ஏற்பாட்டில் இரத்த தானம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முறையிலான உணவுகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் மேயர் எம்பிஎஸ்ஏ-வின் உடற்பயிற்சி மையத்தை அதிகாரப்பூர்வ திறந்து வைத்தார். இந்த உடற்பயிற்சி மையம் தனது பணியாளர்களின் விளையாட்டு வசதிகள் மற்றும்   மனமகிழ்ச்சி பெற வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.

IMG_9497

 


Pengarang :