SELANGOR

மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு வரவேற்பு

பெட்டாலிங் ஜெயா, மே 8:

தாமான் மேடான் சட்ட மன்ற உறுப்பினர், ஹானிஸா தால்ஹா மோட்டார் சைக்கிளோட்டிகளுக்காக பிஜேஎஸ் 1 இருந்து செக்சன் 1 வரை கட்டப்படவுள்ள மேம்பாலம் கட்டும் திட்டத்தை வரவேற்றார். பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தால் ஒப்புதலுடன் திட்டம் ஆரம்பமாக இருக்கிறது. இத்திட்டத்தில், ரிம 6 மில்லியன் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றும் மேம்பாலம் பந்தாய் பாரு நெடுஞ்சாலையை கடந்து செல்லும் என்று கூறினார்.

”   அதிகமான பிஜெஎஸ் 1 குடியிருப்பாளர்கள் பெட்டாலிங் ஜெயா மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் வேலை செய்கிறார்கள், ஆக இந்த மேம்பாலம் சுலபமாக கடந்த செல்ல வழி வகுக்கும். பல சாலை விபத்துகள் நடந்துள்ளன என்றும். வேகமாக வரும் மோட்டார் சைக்கிளோட்டிகள் மோசமான சாலை விபத்துகளை எதிர் நோக்கி வருகிறார்கள்,” என்று கூறினார்

ஹானிஸா மேலும் கூறுகையில், தமது தரப்பு மாநில அரசாங்கம், மலேசிய நெடுஞ்சாலை வாரியம், பந்தாய் பாரு நெடுஞ்சாலை நிறுவனம்  ஆகிய  அனைத்து தரப்பினருக்கும் கடிதம் வழங்கியதாகவும்,  இரண்டாம் பாலம் வேண்டும் எனவும் மேம்பாலம் கட்டும்  இடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறினார்.

 


Pengarang :