SELANGOR

மாணவர்கள் ஆசிரியர்களின் பற்றாக்குறையை புத்ராஜெயா நிவர்த்தி செய்ய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோல குபு பாரு, மே 8:

கடந்த ஆறு வருடங்களாகவே ஆசிரியர்களின் பற்றாக்குறையை எதிர்  நோக்கும் களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் 70 மாணவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு புத்ராஜெயா அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நடவடிக்கை பள்ளியின் வெளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின்  ஆதரவில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்ப்பாட்ட கோரிக்கை தாங்கிய பேனர்கள் ஏந்தி , ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனையை உடனடியாக களைய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனிடையே, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர், பி.ராஜ்குமார் கூறுகையில் மலாய் மொழி, ஆங்கிலம் மற்றும் கணித மாதங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கிறது என்று கூறினார்.

” இந்த ஆர்ப்பாட்டம் எங்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கூடிய விரைவில் நிவர்த்தி செய்ய நடத்தப்பட்டது. 88 மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கவெறும் 10  ஆசிரியர்கள் மட்டுமே  உள்ளனர். இதில் யாரும் மலாய் மொழி, ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் நிபுணத்துவ ஆசிரியர்கள் இல்லை. இதனால் மற்ற ஆசிரியர்கள் அக்கறை  எடுத்து கற்றுக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிறது,” என்று மலாய் மெல் ஓன்லைனில் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும் துணை கல்வி  அமைச்சருமான பி.கமலநாதன் மாநில கல்வி இலாகாவிடம் 2 ஆசிரியர்களை நியமிக்க கூறி இருக்கிறார்.


Pengarang :