SELANGOR

பாயா வேட்லேண்ட் திட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, மே 10:

பாயா வேட்லேண்ட் மேம்பாட்டு திட்டத்தை தேசிய வெளிப்புற மேம்பாட்டு வாரியத்திடம் மாநில அரசாங்கம் சமர்ப்பித்தாலும் மத்திய அரசாங்கம்  ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். மேற்கண்ட வாரியம் சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த திட்ட அறிக்கையை எந்த ஒரு பேச்சுவார்த்தையின்றி   தள்ளுபடி செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

”   இந்த விஷயத்தில், திட்ட அறிக்கையை தேசிய வெளிப்புற மேம்பாட்டு வாரியத்திடம் மாநில அரசாங்கம் சமர்ப்பித்தாலும், அமைச்சர் இதை நீக்கிவிடுமாறும் மற்றும் சமர்ப்பிக்க வேண்டாம் என்று கூறியதால்  எங்களை இதில் தவறு இழைத்தாக சொல்ல வேண்டாம்,” என்று கூறினார்

மேலும் கூறுகையில், மத்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு வழங்கி மேம்பாட்டு திட்ட நகலை தாக்கல் செய்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

KARNIVAL IPR 2017 (26)

 

 

 

 

 

முகமட் அஸ்மின் அலி கூறுகையில், மாநில அரசாங்கம், சுற்றுலா, சுற்றுச் சூழல், பசுமை தொழில் நுட்பம் மற்றும் பயனீட்டாளர் நலன்  ஆட்சிக் குழு உறுப்பினர், எலிஸபத் வோங் மூலமாக முழுமையான விவரங்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டன என்று விவரித்தார்.

வீடமைப்பு, ஊராட்சி மற்றும் நகர் நல்வாழ்வு  அமைச்சர் நோ ஒமார் சில தினங்களுக்கு முன் பாயா வேட் லேண்ட் திட்டம் தேசிய வெளிப்புற மேம்பாட்டு வாரியத்திடம் மாநில அரசாாங்கம் சமர்ப்பிக்கவில்லை  என்றும் அஸ்மின் அலி விளக்கம் வேண்டும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :