SELANGOR

மாணவர்களின் நலன் முக்கியத்துவம் அளிக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா, மே 10:

மாநில அரசாங்கம் கல்வி நிதியை நான்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் சிலாங்கூர் வாழ் மாணவர்களுக்கு தங்களின் கல்விச் சுமைகளை குறைக்க உதவும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தேசிய மலேசிய பல்கலைக் கழகம், மலேசிய புத்ரா பல்கலைக் கழகம், அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக் கழகம் மற்றும் மாரா தொழில் நுட்ப பல்கலைக் கழகம் போன்றவை  இதில் அடங்கும் என்றார் அவர்.

”   உயர் கல்வி அமைச்சு கல்வி உதவித்தொகைகளை குறைக்கும் நிலையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் பயிலும்   மாணவர்கள்களுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது. இது பெடுலி சிஸ்வா திட்டத்தின் கீழ் மாநில அரசாங்கம் அமல்படுத்துகிறது,” என கார்னிவல் ஐபிஆர் தொடக்க விழாவில் தெரிவித்தார்.

இதனிடையே மாணவர்கள் நேரிடையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். ஏனெனில் மாநில மந்திரி பெசார் மற்றும் மாநில  அரசாங்கம் பல்கலைக் கழகத்தில் நுழைய  அனுமதி இல்லை என்றும் கூறினார்.


Pengarang :