NATIONAL

அட்டர்னி ஜெனரல், எஸ்பிஆர்எம்-மை எஸ்ஆர்சி இண்டர்நேசனல் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையிட்டார்

ஷா ஆலம், மே 15:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்தின் பண மோசடி வழக்கு விசாரணை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு நாட்டின் அட்டர்னி ஜெனரல் (ஏஜி) டான்ஸ்ரீ முகமட் அபெண்டி அலி ஆணையிட்டார். அவர் சர்ச்சைக்குறிய 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் பண மோசடி வழக்கு விசாரணை அறிக்கை கூடிய விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று நம்புவதாக கூறினார்.

”   நான் ஏற்கனவே  எஸ்பிஆர்எம்-மிடம் கேட்டு விட்டேன். ஒரு மாத காலத்தில்  இந்த  அறிக்கை தயாராகி விடும். விசாரணை அறிக்கை முன் கூட்டியே திட்டமிட்டு சமர்ப்பிக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். மேலும் தகவல்கள் இன்னும் கொஞ்ச நாளில் தெரிவிக்கப்படும்,” என்று  அஸ்ட்ரோ அவானியிம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியான் நாடுகளின் 17-வது மூத்த சட்ட அதிகாரிகள் கூட்டத்தை புத்ராஜெயாவில் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பிறகு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், தான் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் விசாரணையை எந்த காலத்திலும் நிறுத்துமாறு கட்டளை இடவில்லை என்றார்.

கடந்த 26 ஜனவரி 2016-இல், அபெண்டி செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் மீதான ரிம 2.6 பில்லியன் நன்கொடை மற்றும் எஸ்ஆர்சியின் இண்டர்நேசனல் நிறுவனத்தின்  ரிம 42 மில்லியன் பண மோசடி வழக்குகளில் அடிப்படை இல்லை என்று விவரித்தது குறிப்பிடத்தக்கது.

”   நான் முன்பு சொன்னது போல் ரிம 2.6 பில்லியன் நன்கொடை பிரதமர் சேமிப்பு வங்கிக் கணக்கில் இருந்தது என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரணை  இருக்காது. நாங்கள் தொடர் விசாரணை இருக்காது என்றால், ஓர்  ஓரம் வைக்கப்படும். மீண்டும் புதிய ஆதாரங்கள் இருந்தால் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்,” என்று விவரித்தார்.


Pengarang :