SELANGOR

எல்கெஎஸ்ஏ தோல் கட்டணம், கிள்ளான் மூன்றாவது பாலம் இலவசம்

கிள்ளான், மே 25:

கிள்ளான் மூன்றாவது பாலம் ரிம 225 மில்லியன் செலவில் கட்டப்பட்டாலும் பயனீட்டாளர்களுக்கு எந்த ஒரு தோல் கட்டணம் கிடையாது என்று மாநில பொது கணக்கறிக்கை குழு உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார். ஒவ்வொரு வாகனத்திற்கு ரிம 1 வீதம் கட்டணம் விதித்தால் 14 ஆண்டுகளில் மாநில அரசாங்கம் செலவு செய்தயை மீட்டு கொள்ளலாம். ஆனால் மாநில அரசாங்கம் மக்களை சுமை படுத்தும் விதமாக செயல்படாது என்று விவரித்தார்.

”   கிள்ளான் மூன்றாவது பாலத்தின் மீது இருக்கும் போது, ஏறக்குறைய இதே தொலைவில் இருக்கும் ஷா ஆலம் – கெமுனிங் நெடுஞ்சாலையில் வசூல் செய்யும் தோல் கட்டணம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. நாம் மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில் கட்டி முடித்து விட்டோம். அரசாங்கம் குறைந்த செலவில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மக்கள் சுமைகளை குறைக்க உதவ வேண்டும்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அதற்கு முன்பு அவர் கணக்கறிக்கை குழுவினருடன் இணைந்து மேற்பார்வை செய்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :