SELANGOR

270,000 மேற்பட்ட குழந்தைகள் 2008-இல் இருந்து தாவாஸில் பதிவு

ஷா ஆலம், ஜூன் 1:

சிலாங்கூர் பாரம்பரிய குழந்தைகள் சேமிப்பு (தாவாஸ்) திட்டத்தில் இதுவரையில் 272,356 குழந்தைகள் பதிவு செய்து உள்ளதாகவும் அதில் 309 குழந்தைகள் இறந்து விட்டதாகவும், ஆக தற்போது 272,049 குழந்தைகள் சேமிப்பு திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாவாஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது வரையில் 128,419 உறுப்பினர்கள் தங்களின் அறிக்கைகளை பெற்று விட்டதாகவும் மேலும் 143,630 பேர்களுக்கு இன்னும்   கிடைக்காமல் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

புள்ளி விவரங்கள் படி மலாய் இனத்தவர் 184,367 பதிவு செய்து இருப்பதும், சீனர்கள் 49,851, இந்தியர்கள் 30,467 மற்றும் மற்ற இனத்தவர்கள் 7,364 என்று தெளிவாக தெரிகிறது.

tawas01

 

 

 

 

 

தாவாஸ், இந்த ஆண்டு 4,367 விண்ணப்பங்கள் பெற்றாலும் 3,177 மட்டுமே தகுதி பெற்றவர்கள் ஆவார். தாவாஸ் திட்டம், சிலாங்கூர் பாரம்பரிய குழந்தைகள் வாரியம் (யாவாஸ்) கீழ் சிலாங்கூரில் பிறந்த குழந்தைகள் மூன்று வயதை அடையும் முன்பு பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆகஸ்ட் 17 2015-இல் சிலாங்கூர் பாரம்பரிய குழந்தைகள் சொத்து நிதி ஒப்புதல் அளிக்கப் பட்டு ஒவ்வொரு சேமிப்பாளருக்கும் 18 வயது நிரம்பியவுடன் ரிம 1,500 கிடைக்கும்படி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :