NATIONAL

நஜிப் மற்றும் ஷாஃபி, ரிம 9.5 மில்லியன் விடயத்தில் பதில் அளிக்க வேண்டும்

ஷா ஆலம், ஜூன் 2:

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் இருந்து அன்வார் இப்ராஹிம் அவதூறு 2 வழக்கில் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லாவின் வங்கி கணக்கில் மாற்றியதாக கூறும் சரவாக் ரெப்போட் குற்றச்சாட்டு அடிப்படையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் வலியுறுத்தினார். இந்த புதிய பரபரப்பான செய்தி நாட்டில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் நஜிப் இரண்டு முறை ஷாஃபியின் வங்கி கணக்கில் மாற்றியதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அதுவும் அன்வார் இப்ராஹிம் நீதி மன்றத்தில் இறுதி தீர்ப்புக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு பணம் வங்கி கணக்கில் மாற்றியதாக சரவாக் ரேப்போட் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட அறிக்கையின் படி பணம் நஜிப்பின் ஏம் பேங்க் தனிப்பட்ட வங்கி கணக்கில் இருந்து மாற்றப்பட்டது எனவும் 1எம்டிபி, எஸ்ஆர்சி இண்டர்நேசனல் போன்ற நிறுவனங்களும் இதே வங்கியில் கணக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

”   ஷாஃபி மிகவும் பிரபலமான வழக்கறிஞராகவும் நஜிப் மற்றும் ரோஸ்மா ஆகிய இருவரிடம் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவராகவும் இருந்து வருகிறார். அதுவும் அரசாங்கம் தனிநிறுவன வழக்கறிஞரான ஷாஃபியை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமனம் செய்தது மிக ஆச்சரியமாக இருந்தது. மேலும் ஷாஃபி தனிப்பட்ட முறையில் அன்வார் மீது வெளிப்படையாக அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டு வந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, சைபுல் புஹாரி அன்வார் இப்ராஹிம் மீது புகார் கொடுக்க நஜிப் இல்லத்திற்கு சென்ற போது ஷாஃபி உடன் இருந்தார்,” என்று தனது அறிக்கையில் நிக் கூறினார்.

NIK-NAZMi

 

 

 

 

 

நிக் நஸ்மி மேலும் கூறுகையில், ஷாஃபி அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கை விளக்கம் அளிக்க நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை அன்வாரை அவமானப்படுத்தியது மட்டுமில்லாமல் நீதிமன்றத்தை கேவலப்படுத்தினார். இவரின் செயல்பாடுகள் அப்போதைய எதிர் கட்சி தலைவரான அன்வார் இப்ராஹிமை வீழ்த்தவேண்டும் என்று நஜிப் உடன் கூட்டு சேர்ந்தார் என்றால் மிகையாகாது.


Pengarang :