NATIONAL

ஜெம்போல் விபத்து : டிரேலர் ஓட்டுனர் நான்கு நாட்கள் தடுப்புக் காவல்

பஹாவ், ஜூன் 12:

நேற்று மாலை ஜெம்போல், பாஹாவ்-கெராத்தோங் சாலை, கிலோ மீட்டர் 25-இல் நடந்த கோர விபத்தில் எட்டு பேர்கள் உயிர் இழந்த சம்பவத்தில் தொடர்புடைய டிரேலர் ஓட்டுனர் நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்க மாஜிஸ்திரேட் முகமட் ரேஸா அஸார் ரேஸாலி ஆணையிட்டார். இந்த ஆணை, ஜெம்போல் மாவட்ட காவல்துறை அலுவலகத்தின் சாலை விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நூருல் ஹாபிஸா முகமட் மார்ஸ் கோரிக்கை விடுத்திருப்பதை முன்னிட்டு மாஜிஸ்திரேட் நீதிபதி ஆணையிட்டதாக பெரித்தா ஹாரியான் ஓன்லைனில் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைச்சாலை உடை அணிந்த அந்த ஆடவர் காலை 9.10 மணிக்கு காவல்துறை வாகனத்தில் மற்ற கைதிகளுடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வந்தார். நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து காவல்துறை சம்பந்தப்பட்ட ஆடவரை 1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் செக்சன் 41 (1) விதியின்படி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய மாலை 2.30 மணிக்கு நடந்த கோர விபத்தில் 44 வயது மதிக்கத்தக்க ஆடவர் தனது டிரேலரை மூன்று வாகனங்களின் மீது மோதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் புரோடோன் எக்ஸோரா காரில் பயணித்த ஐந்து பயணிகள் மற்றும் பெரோடுவா மைவி காரில் இருந்தவர்களும் உயிர்ப்பலி ஆனதாக காவல்துறை தெரிவித்துள்ளதாக பெரித்தா ஹாரியான் ஓன்லைனில் செய்தி வெளியிட்டுள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :