NATIONAL

ஐந்து பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை

கோலா லம்பூர், ஜூன் 12:

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங் மற்றும் சரவாக் கரையோரத்தில் நாளை விடிகாலை வரை இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு கூறுகிறது. மலேசிய வானிலை ஆய்வு இலாகா  (மெட்மலேசியா) தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் காற்றின் வேகம் ஒரு மணிநேரம் 50 கிலோமீட்டர் வரை கடுமையான காற்றழுத்தமும் மற்றும் கடல் பகுதியில் அலைகள் 3.5 மீட்டர் உயரத்தில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே மலாக்கா நீரிணையில் அதேபோல் சூழ்நிலை உருவாகும் என்றும் நாளை காலை வரை இந்த நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிறிய படகுகள் கடலில் செல்ல ஆபத்து ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு மலேசிய வானிலை ஆய்வு இலாகாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான  www.met.gov.my. நாடலாம்.

*தகவல்: பெர்னாமா செய்தி 

#கேஜிஎஸ்


Pengarang :