ANTARABANGSA

பிரேசில் அதிபரின் நெருங்கிய சகாவை ஊழல் சம்பந்தமாக கைது நடவடிக்கை

பிரேசிலியா, ஜூலை 4:

பிரேசில் மத்திய காவல்துறை, அதிபர் மைக்கேல் தேமரின் நெருங்கிய சகாவும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான கேடல் வியாரா லீமாவை கைது செய்தனர். கடந்த நவம்பரில், முன்னணி பிரேசில் வங்கியில் சட்டத்திற்கு புறம்பான பரிவர்த்தனை சம்பந்தப்பட்டதால் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தவர் கேடல் வியாரா லீமா ஆவார். இவர், சில நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்று வங்கி கடன் விண்ணப்பத்தில் கைஸா எகோனோமிகா என்ற வங்கியில் தலையீடு செய்தார் என்று குற்றச்சாட்டை எதிர் நோக்கி உள்ளார். அவரோடு மேலும் ஐவர் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். கேடல் வியாரா லீமாவோடு முன்னாள் அவைத்தலைவர் எடுவார்டோ குன்ஹா மற்றும் அதிபர் தேமர் கட்சியின் நிதி தேடும் இடைத்தரகரான லூசியோ புஃனாரோ ஆகியோர் அதே குற்றச்சாட்டை எதிர் நோக்கி உள்ளனர்.

இந்த வாரம், பிரேசில் காங்கிரஸ் அவை ஊழல் வழக்கு சம்பந்தமாக கூடி பேச இருக்கிறது. அவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேமருக்கு எதிராக வாக்களிக்கும் நிலையில் அவர் 180 நாட்களுக்கு பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப் படுவார். அதன் பிறகு, உயர் நீதிமன்றத்தில் தேமர் விசாரிக்கப் படும் சூழ்நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#கேஜிஎஸ்

=EZY=


Pengarang :