SELANGOR

நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு அனைத்துலக ரீதியில் உறவுகளை வளர்க்கும்

ஷா ஆலம், ஜூலை 4:

கடந்த ஜூலை 2-இல் பண்டான் இண்டா, அம்பாங் ஜெயா நகராண்மை கழகத் திடலில் சிறப்பாக நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு பொது மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு தூதர்கள் மற்றும் வட்டார வணிக முதலீட்டாளர்கள் புடைசூழ கலந்து கொண்டனர்.

மாநில முதலீடு, சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை, வணிகம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறுகையில், தூதர்கள் மற்றும் வணிக முதலீட்டாளர்களின் வருகை சிலாங்கூர் மாநிலத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதை காட்டுகிறது என்று கூறினார்.

சிலாங்கூர் மாநில நிர்வாகத்தின் வெளிப்படையான மற்றும் நட்பு ரீதியிலான செயல்பாடுகள் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இருக்கிறது என்றார்.

Raya3

 

 

 

 

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்களில் மதிப்புமிக்க கமலா ஷிரின் லக்டீர் (அமெரிக்கா) எச்.ஈ. பிரடிரிக் லேப்லான்ச் (பிரான்ஸ்), யூகோ மியாகாவா (ஜப்பான்), எச்.ஈ. மைக்கேல் வின்ஸேப் (சுவிட்சர்லாந்து), யூகோ ஹுயூன் சியோல் (தென் கொரியா), ரஹ்மத்துல்லா பக்தியாரி (ஈரான்), எச்.ஈ. அத்திலா காலி (ஹாங்கேரி) போன்ற உலக நாடுகளின் தூதர்கள் அடங்குவர்.

இதனிடையே, திறந்த இல்ல நிகழ்வில் புருணை, ஸ்ரீ லங்கா, நைஜீரியா, ஏமன், கியூபா, எகுவாடோர், காம்பியா மற்றும் செனகல் போன்ற நாடுகளை சேர்ந்த வணிக முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

#கேஜிஎஸ்


Pengarang :