SELANGOR

மஸ்லான், சிலாங்கூரின் புதிய காவல்துறை தலைவர்

ஷா ஆலம், ஜூலை 8:

சிலாங்கூரின் புதிய காவல்துறை தலைவராக டத்தோ மஸ்லான் மன்சூர் ஜூலை 7-இல் இருந்து அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்புக் கொண்டார். மஸ்லான், கட்டாய ஓய்வு பெற்ற டத்தோ ஸ்ரீ அப்துல் சாமா மாட் அவர்களுக்கு பதிலாக பதவியில் அமர்த்தப் பட்டார்.

பதவி ஏற்கும் விழா, சிலாங்கூர் காவல்துறை தலைமையகத்தில் (ஐபிகெ) மெனாரா 2-இல், புக்கிட் அமான் குற்றவியல் போதைமருந்து விசாரணை பிரிவின் இயக்குனர் டத்தோ ஸ்ரீ முகமட் மொக்தார் முகமட் ஷாரீப்ஃ மற்றும் மற்ற மூத்த காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

டத்தோ மஸ்லான் மன்சூர் முன்னாள் சரவாக் காவல்துறை தலைவர் ஆவார். காவல்துறையில் 1979-இல் இணைந்து, கோலா லம்பூர் காவல்துறை மையத்தில் பயிற்சி பெற்று இன்ஸ்பெக்டர் பதவியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மலாக்காவில் பிறந்த மஸ்லான் வேல்ஸ் அபெரிஸ்த் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை இளங்கலை பட்டம் பெற்று அடிப்படை சட்ட சான்றிதழும் பெற்றுள்ளார். கடந்த 2016, மே 16 முதல் 14 மாதங்கள் சரவாக் காவல்துறை தலைவராக பணியாற்றினார். இதற்கு முன்பு புக்கிட் அமானில் 2013-இல் இருந்து 2014-வரை குற்றவியல் விசாரணை பிரிவின் (உளவு மற்றும் நடவடிக்கை) துணை இயக்குனராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே, மஸ்லான் செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது, தேசிய காவல்துறை தலைவரின் ஆணைக்கு ஏற்ப குற்றங்களை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தகவல்: பிஎச் ஓன்லைன்

#கேஜிஎஸ்

=EZY=


Pengarang :