SELANGOR

எஸ்பிஆர் நீதிமன்ற முடிவை மதிக்கிறது

ஷா ஆலம், ஜூலை 8:

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்),  தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு பணிகளை தொடரக்கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டது என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹாசிம் அப்துல்லா கூறினார்.

”  எஸ்பிஆர் எப்போதும் நீதிமன்ற முடிவை மதித்து பின்பற்றும் என்றார். நீதிமன்றம், சிலாங்கூர் மாநில அரசாங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சிலாங்கூர் மாநிலத்தை சேர்க்காமல் தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிக்க கூடாது என்ற தீர்ப்பை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்கிறோம்,” என்று தெரிவித்தார்.

”  நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழி, எஸ்பிஆர் தனது தார்மீக கடமையை மலேசிய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தேர்தல் மறுசீரமைப்பு விசாரணைகளை தொடர்ந்து நடத்தும். எஸ்பிஆர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை மதித்து செயல்படும்,” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பரில், உயர் நீதிமன்றம் தேர்தல் தொடர்பான விசாரணைகளை தள்ளிப்போட தீர்ப்பு அளித்த வேளையில், எஸ்பிஆர் சிலாங்கூர் மாநில தேர்தல் மறுசீரமைப்பு விசாரணையை மட்டும் தள்ளி வைக்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :