SELANGOR

கொள்கைகள் மறுஆய்வு செய்ய ஹிஜ்ரா-யுனிசெல் ஒத்துழைப்பு

ஷா ஆலம், ஜூலை 12:

ஹிஜ்ரா சிலாங்கூர், சிலாங்கூர் பல்கலைக் கழகத்துடன் (யுனிசெல்) ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. சிறுதொழில் கடனுதவி திட்டமான ஹிஜ்ரா சிலாங்கூர் மாநில வர்த்தகர்கள் பயன் பெறுகிறார்களா என்று ஆய்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக அறிக்கை வெளியிடப்படும் என்று நிர்வாகத் தலைவர் டத்தோ டாக்டர் மன்சூர் ஓத்மான் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஹிஜ்ரா திட்டம் அடிப்படையில் முழுமையான ஆய்வு அறிக்கை மற்றும் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

”   யுனிசெல், ஹிஜ்ரா திட்ட செயலாக்கம் பற்றி  ஆய்வு மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரா திட்டத்தின் முழுமையான செயலாக்க நடவடிக்கைகள் பற்றிய ஆய்வறிக்கை மாநில அரசாங்கத்திடம் சமர்பிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

MANSOR OTHMAN

 

 

 

 

 

இதனிடையே, டாக்டர் மன்சூர் கூறுகையில், மூன்றாவது ஆண்டில் ஹிஜ்ரா விண்ணப்பம் மேலும் கடுமையாக்கப்படும் என்று கூறினார். திருப்பி செலுத்தும் முறைகள் தொடர்பாக பிரச்சனைகள் எழுந்துள்ளது குறிப்பாக நகர வணிகர்கள் சரிவர ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தில் திரும்பி செலுத்துவதில் பிரச்சனை எதிர் நோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :